உலகளாவிய வசூலில் 2ஆவது இடத்தைப் பிடித்து ‘ஜெயிலர் 2 சாதனை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளாவிய பொக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
ரென்ட்ரேக் (Rentrak) அமைப்பின் மதிப்பீடுகளின்படி, ஒக்டோபர் 16 முதல் 18 வரையிலான வார இறுதி நாட்களில் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெயிலர் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
வார இறுதியில் மட்டும் உலகளவில் 31.2 மில்லியன் டொலர்களை (சுமார் $31.2 million) ‘ஜெயிலர் 2’ வசூலித்துள்ளது.
51.1 மில்லியன் டொலர்களை வசூலித்த பாரமவுண்ட் (Paramount) நிறுவனத்தின் “ஸ்ட்ரீட் ஃபைட்டர்” (Street Fighter) திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒக்டோபர் 15 அன்று வெளியான இந்த திரைப்படம், இந்தியாவில் தனது 4 நாள் நீட்டிக்கப்பட்ட வார இறுதியில் சுமார் ₹224 கோடி (INR 224 crore) வசூலித்துள்ளது.
தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் 4 நாட்களில் அதிக வசூல் செய்த 3 ஆவது திரைப்படம் என்ற பெருமையை ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளது.
அத்துடன், ரஜினிகாந்தின் முந்தைய படமான ‘கூலி’ ஈட்டிய ₹224.25 கோடி வசூலுக்கு நிகராக இந்த திரைப்படமும் சாதனை படைத்துள்ளது.


