இந்தியாவின் மிகச் சிறந்த நடிப்பு அரக்கி யார்? – நடிகர் எஸ்.ஜே. சூர்யா சொன்ன பதில்
அண்மைய நேர்காணல் ஒன்றில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் இந்தியாவில் சிறப்பாக நடிக்கும் நடிப்பு அரக்கி யார்? என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் வெளிப்படையாகத் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்தியாவில் மிரட்டலான நடிப்பை வழங்கும் திறமைசாலிகளாக அவர் மமிதா பைஜூ மற்றும் ஆலியா பாட் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
அண்மைக்காலமாகத் தனது யதார்த்தமான மற்றும் தனித்துவமான நடிப்பால் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துவரும் மமிதா பைஜூவின் வளர்ச்சியைப் புகழ்ந்த அவர், மறுபுறம் வட இந்தியாவில் தனது அசாத்திய நடிப்பால் உச்சம் தொட்டுவரும் ஆலியா பாட்டின் திறமையையும் சிலிர்ப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
திறமையான நடிகைகளைத் திறம்பட அடையாளம் கண்டு எஸ்.ஜே. சூர்யா பாராட்டியுள்ள இந்த விடயம் தற்போது இணையத்தில் சினிமா ரசிகர்களால் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.


