உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 17.10.2026

ராசி பலன்கள் 3 மணி நேரம் முன்
60 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பெருமாள் வழிபாடு மனதிற்கு அமைதி தரும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். மன உறுதியோடு இருப்பீர்கள். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். தைரியம் வெளிப்படும் நாள். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். எதிரி தொல்லை நீங்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். காரிய தடை விலகும். முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு இருப்பீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்த்து பார்த்து செய்வீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். நல்லது நடக்கும். உறவுகளோடு நல்லுறவு ஏற்படும். மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் பிறக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய வசீகரத் தோற்றம் வெளிப்படும். பேச்சின் திறமையால் நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். குறிப்பாக முதியவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை கவனிக்காமல் விடக்கூடாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் உயரக்கூடிய நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. புதிய முதலீட்டின் போது கவனம் தேவை. மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். முன்பின் தெரியாத நபரோடு எந்த பழக்க வழக்கமும் வைத்துக் கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் அதிகமாக வரும். டென்ஷனால் உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியாக நடக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் பின்னடைவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்த நபர் உங்களை விட்டு பிரிந்து போகவும் வாய்ப்பு உள்ளது. கவனத்தோடு இருக்க வேண்டிய நாள் இன்று.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரியத்தடை விலகும். வீட்டில் சுப காரியங்கள் முயற்சிகள் நடப்பதற்கு பேச்சுவார்த்தைகள் தொடங்கும். வாழ்க்கைத் துணை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை தான். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வாழ்க்கைத் துணையோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது சின்ன டென்ஷன் வந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 16.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காரிய தடை விலகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம்…

99 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக் கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையில் பின்னடைவு வரலாம். நேரத்தை வீணடிக்காதீர்கள். அனாவசியமாக கைபேசி பார்க்காதீர்கள். யாரிடமும் வம்பு…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 14.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. நிதானமாக ஒரு வேலையை செய்ய வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் அதிரடியாக எடுக்கக் கூடாது. அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு…

49 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 13.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய கவலைகளை மறந்து விடுவீர்கள். பழைய பகைகள் எல்லாம் சரியாகும். உறவுகளோடு இருந்து வந்த மனக் கசப்பு நீங்கும்.…

77 0 0