இன்றைய ராசி பலன்கள் – 12.10.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். அவர்கள் கேட்டதை வாங்கித் தர முயற்சி செய்யவும். உறவினர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
துலாம்
துலா ராசிக்காரர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் மிக அவசியம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் உற்சாகமாகவே இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமும் கலகலப்புமான சூழ்நிலையும் காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பப் பெரியவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

