உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சினிமா 2 மாதங்கள் முன்
141 பார்வைகள்

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர், “ஆமாம், நான் கருப்புதான். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னுடைய தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என்னோட பதில்.. என்னோட படம்தான். இது என்னுடைய அடையாளம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கடினமான கால கட்டங்களில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி தனக்கு வழங்கி வந்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூர்ந்த அட்லீ, உண்மையான நட்பும் ஆதரவும் ஒருவரின் உருவத்தையோ நிறத்தையோ பார்த்து வருவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடின உழைப்பாலும் திறமையாலும் திரையுலகில் உச்சம் தொட்டுள்ள அட்லீயின் இந்தப் பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0