தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மனைவி ராஷ்மிகா குறித்தும், தனது திருமண வாழ்க்கை பற்றியும் விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குத் திருமணம் முடிந்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருக்கிறது.
நல்ல குடும்பம் அமைந்ததும், ராஷ்மிகா போன்ற ஒரு மனைவி எனக்குக் கிடைத்ததும் நான் செய்த பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரையில் இணை ஜோடியாக நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் தேவரகொண்டாவின் இந்தத் தனிப்பட்ட வாழ்க்கைக் கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.