உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆஸ்கார் விருதுக்கு இலங்கையின் சார்பில் ‘ரிவர்ஸ்டர்ன்’ திரைப்படம் பரிந்துரை

சினிமா 7 நாட்கள் முன்
96 பார்வைகள்

உலகின் மிக உயரிய திரைப்பட விருதான 99ஆவது அகாடமி விருதுகளுக்கு (ஆஸ்கார்) இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ‘ரிவர்ஸ்டர்ன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப்பதற்காக லலித் ரத்நாயக்கவின் ‘ரிவர்ஸ்டர்ன்’, ‘விஹங்க பிரேமய’, ‘ஆயு’, ‘ஃபாதர்’, ‘அந்தோனி’ (தமிழ்) மற்றும் ‘கிரிக்கெட் சாது’ ஆகிய 6 திரைப்படங்கள் விண்ணப்பித்திருந்தன.

எனினும், ஆஸ்கார் சர்வதேச திரைப்படப் பிரிவுக்கான ‘விதி 16, பிரிவு 2C’ இன் படி, ஒரு திரைப்படம் அந்த நாட்டில் திரையரங்குகளில் வணிகரீதியாக திரையிடப்படுவதற்கு முன்பாக தொலைக்காட்சி, வானுார்திகள் , கேபிள் டிவி அல்லது இணையத்தளங்களில் ஒளிபரப்பப்பட்டிருந்தால் அது போட்டியிட தகுதியற்றதாகும்.

அந்தவகையில், சத்ர வீரமன் இயக்கிய ‘ஆயு’ திரைப்படம் இலங்கையில் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே தென்னாப்பிரிக்க தொலைக்காட்சி மற்றும் வானுார்திகளில் திரையிடப்பட்டமையால் தகுதியிழப்பு செய்யப்பட்டது.

அதேபோன்று, சஞ்சீவ புஷ்பகுமார இயக்கிய ‘விஹங்க பிரேமய’ திரைப்படமும் இலங்கையில் திரையிடப்படுவதற்கு முன்பாக அமெரிக்க அலைவரிசையினூடாக ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, தகுதிபெற்ற எஞ்சிய 4 திரைப்படங்களை மட்டுமே பரிசீலனைக் குழு மதிப்பீடு செய்து, அதில் லலித் ரத்நாயக்க இயக்கிய ‘ரிவர்ஸ்டர்ன்’ திரைப்படத்தை இலங்கையின் அதிகாரப்பூர்வ பரிந்துரையாகத் தேர்வு செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0