இசையமைப்பாளர் இளையராஜாவுக்குக் கௌரவம் : அஞ்சல் தலையை வெளியிட்டது அவுஸ்ரேலிய அரசு
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவுஸ்திரேலிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
இந்திய இசைக் கலைஞர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் என்பதால் உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் இளையராஜா மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இசைத்துறையில் இளையராஜா 50 ஆண்டுகளாக செய்த சிறப்பான பங்களிப்பைப் போற்றும் விதமாக, அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கான அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு அவுஸ்திரேலிய அரசிற்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அவுஸ்திரேலியாவில் இளையராஜாவுக்குக் கிடைத்த இந்த மரியாதையை அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர்.