உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவின் 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தில் நடைபெற்றது

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
58 பார்வைகள்

இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று (22) குஜராத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இதுவரை இந்திய ஜனாதிபதி மாளிகையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த தேசிய விருதுகள் விழா, நாட்டின் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் புதிய முடிவின்படி, முதன்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடத்தப்பட்டது.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று, 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

அமரன் படத்திற்கான சிறந்த பின்னணி இசை விருதை ஜனாதிபதியிடம் இருந்து ஜி.வி. பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.

சிறந்த தமிழ்படம் என்ற வகையில் ராயன் திரைப்படத்தை இயக்கியதற்காக நடிகர் தனுஷ் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

சிறந்த சண்டை பயிற்சிக்கான விருதை அனல் அரசு மகாராஜா படத்திற்காக பெற்றுக் கொண்டார்.

பிரம்மயுகம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் மம்மூட்டி பெற்றுக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய்கான ஆதரவு குறைவு!

தமிழ் நாட்டில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களப் பிரசாரம் தீவிரமாகியுள்ள நிலையில், புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் குறித்த இரண்டு தொகுதிகளிலுமே…

61 0 0
இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

48 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

46 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

32 0 0