திருமணத்திற்குப் பின்பும் சினிமா பயணம் : மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
திருமணத்திற்குப் பிறகும் தனது வாழ்க்கையில் எந்தவொரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்றும், சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டதால், தனது கலைப் பயணம் எப்போதும் போல வழக்கம் போல் தொடர்வதாக நடிகை ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களாக அறிமுகமான தானும் விஜய் தேவர்கொண்டாவும் தற்போது தம்பதிகளாக (ஜோடிகளாக) வாழ்கிறோம் என்று கூறியுள்ள அவர், விஜய் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய குணமுடையவர் என்றும், தனது தொழில் மற்றும் வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருவதன் காரணமாக, தமக்கு நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதற்கு நேரம் கிடைப்பதாக அவர் அந்தப் நேர்காணலில் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.