உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

சினிமா 4 மணி நேரம் முன்
13 பார்வைகள்

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

இதில் ரஜினிகாந்த் வைத்தியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தர்மன்’ படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்த்து.

இந்நிலையில், ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக அறிவித்துள்ள இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துடன் ராஷி கன்னா நடிக்கும் காட்சியை படமாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை…

23 0 0
சினிமா

சூர்யா – ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினரின் ‘20 Years of Love & War’ Collab காணொளி சமூக வலைத்தளங்களில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.…

21 0 0
சினிமா

திரைப்பட விளம்பரத்தில் அரசியல் கலக்கக் கூடாது : ஜேசன் சஞ்சய் வெளிப்படை!

முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அறிமுக திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

47 0 0
சினிமா

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், ‘சீயான்’ விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் (63 ஆவது படம் ) தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப்…

50 0 0