சூர்யா – ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினரின் ‘20 Years of Love & War’ Collab காணொளி சமூக வலைத்தளங்களில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.
சமீபத்தில் தங்களது 20ஆவது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சூர்யா – ஜோதிகா தம்பதியினர் திருமண உறுதிமொழியை மீண்டும் புதுப்பித்தனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘20 Years of Love & War’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த Collab காணொளி, வெளியான 13 மணி நேரத்திலேயே 48 மில்லியன், அதாவது 4.8 கோடி பார்வைகளையும், 3.7 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குறுகிய காலத்தில் அதிகளவான பார்வைகள் மற்றும் லைக்குகளைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக, லண்டனில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் சந்திப்பு தொடர்பான Collab காணொளி, 18 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளையும் 2 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் திருமண உறுதிமொழி புதுப்பிப்பு தொடர்பான இந்த காணொளி, குறுகிய நேரத்திலேயே அதிக பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து அந்த எண்ணிக்கையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.