விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், ‘சீயான்’ விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் (63 ஆவது படம் ) தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, இந்தப் படத்திற்கு ‘பவர் ஹவுஸ்’ (Power House) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘இருமுகன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் சங்கருடன் விக்ரம் இரண்டாவது முறையாக இணையும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.