உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச எரிபொருள் விலை உயர்வு; உள்நாட்டு சந்தை குறித்து அமைச்சர் அனுர கருணாதிலக விளக்கம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
79 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உலகச் சந்தையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் (14) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய சந்தை விலையில் தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியாது எனச் சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறித்த நிறுவனங்கள் தமக்கு லீற்றருக்கு ரூ. 140 முதல் ரூ. 160 வரை நஷ்டம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், இது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு இறுதி முடிவையும் எட்டவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

எரிபொருள் சந்தையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் முதன்மை நோக்கமே போட்டித் தன்மையை உருவாக்கி நுகர்வோருக்கு நியாயமான விலையில் எரிபொருளை வழங்குவதாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே அரசின் முக்கிய முன்னுரிமை என்றார்.

தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக, கடந்த மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் டீசலுக்கு ரூ. 100 மற்றும் பெற்றோலுக்கு ரூ. 20 என அரசு நிவாரணம் வழங்கியதைப் போலத் தொடர்ந்து நிவாரணம் வழங்குவது அல்லது தனியார் நிறுவனங்களுக்கு விலை எல்லைகளை நிர்ணயித்து அதன்கீழ் செயற்பட அனுமதிப்பது போன்ற பல்வேறு சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

நுகர்வோரின் சுமையையும், விநியோக நிறுவனங்களின் சிக்கல்களையும் கவனத்தில் கொண்டு, விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு அரசு விரைவில் உரிய முடிவை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறையில் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

அம்பாறை மாவட்டம், உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியா பகுதியில் புகுந்த காட்டு யானையொன்று அங்கிருந்த வீடொன்றை அடித்து நொறுக்கிப் பலத்த சேதப்படுத்தியுள்ளது. இன்று(25) அதிகாலை வேளையில் கிராமத்திற்குள்…

69 0 0
இலங்கை செய்திகள்

கொட்டும் மழையிலும் 19ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம்!

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது…

81 0 0
இலங்கை செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் நோக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் பிரதமர்

கல்வி அமைப்பில் மிக உயர்ந்த தகுதிகள் மற்றும் திறமைகளைக் கொண்ட மனித வளங்களை இணைத்துக் கொள்வதற்கான முறைசார் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

71 0 0
இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக 12 பேர் உயி@ரிழப்பு : ஒருவர் மாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில்,…

77 0 0