உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழருக்குரிய எந்த விடயத்தையும் அரசு தொட்டுக்கூடப் பார்க்கவில்லை : சுமந்திரன் குற்றச்சாட்டு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
135 பார்வைகள்

ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கத் துளியளவும் முன்வரவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

சாவகச்சேரியில் நேற்று நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டை ஆட்சி செய்பவர்கள் அதிகாரங்கள் பகிரப்பட்டதாகக் கூறினாலும், மாகாண சபைகள் அற்ப சொற்ப அதிகாரங்களோடு இயங்காமல் கிடக்கின்றன. மத்திய அரசுக்கு இல்லாத அதிகாரங்களையும் தன் முகவர்கள் மூலம் ஒன்பது மாகாணங்களிலும் நிறைவேற்றும் முழுச் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரியாகவே தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றார்.

இந்த அரசு ஊழல், லஞ்சம், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகத் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்கு முன்னர் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளைப் போலன்றி, இரு தரப்புக்கும் எதிராக அவர்கள் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக அவ்வளவு மும்முரமாகச் செயற்படும் இந்த அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு விடயத்தையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. எங்களது வாழ்வாதாரத்துக்கு அத்திவாரமான நிலங்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே 2024ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளையும், ஏற்கனவே திறக்கப்பட்ட பலாலி வீதியையுமே மீளவும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். வடக்கில் இதுவரை ஓர் அங்குல நிலம் கூட புதிதாக விடுவிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்களுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வாய் கிழியக் கத்தியவர்கள், இப்போது ஜனாதிபதியாகிவிட்டு இராணுவத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று கூறுகின்றார்கள்.

அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முதலாவது வாக்குறுதியான புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பௌத்த மதபீடங்களின் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவரும் துணிவைக் காட்டும் அரசு, அதிகாரப் பகிர்வு குறித்துச் சிந்திப்பதில்லை. எல்லாவற்றையும் தங்களுடைய கைக்குள்ளே கொண்டு வந்து ஒரு கட்சி ஆட்சியாக மாற்றும் நடவடிக்கைகள்தான் நடக்கின்றன. எனவே, இவற்றை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.
……………………………………..

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

112 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

116 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

118 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

137 0 0