உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

செம்மணி மனிதப் படுகொ@லைக்கு விசாரணை கோரி யாழ். நகரில் இன்று பேரணி

56 பார்வைகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படுகிறது

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

45 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரத் தடையால் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிக்கல்.!

திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்…

40 0 0
இலங்கை செய்திகள்

கொக்கைன் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 43…

42 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி சாதனை.!

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி ப.ஹன்சிகா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.…

36 0 0