உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
45 பார்வைகள்

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்டோருக்கு அருகாமையில் இயங்கி வரும் ‘LU LU’ நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட மின் ஒழுக்கு (மின்கசிவு) காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் முழுமையாகக் கட்டுப்படுத்தினர். இருப்பினும் இத்தீ விபத்தினால் குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

தீ விபத்தின் போது உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும், அச்சேவையை அக்கரைப்பற்றுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் அங்கு கூடியிருந்த வர்த்தகர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படுகொலைக்கு விசாரணை கோரி யாழ். நகரில் இன்று பேரணி

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேரணி…

2 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

47 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

46 0 0