உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
179 பார்வைகள்

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துள்ளது.

மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.

மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடியும்.

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது.

இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப் பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர்.” – என்றார்.
……………………….

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

117 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

118 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

119 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

137 0 0