உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவியில் தொடர்வதற்கு ஜகத் விக்கிரமரத்னவுக்கு எந்த அருகதையும் இல்லை.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
73 பார்வைகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“நாடாளுமன்ற சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பிலேயே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஊழல் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி விசாரணைகளுக்கு வழிவிட்டுத் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே நியதியாகும். ஆனால், சபாநாயகர் இந்த ஆசனத்தில் தொடர்ந்தும் இருப்பது பிரச்சினைக்குரியதுடன் சட்டப்படியும் கேள்விகளை எழுப்புகின்றது.

நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் மேடைகளில் கூறியது இதனைத்தானே? சட்டம் அனைத்துக்கும் பொதுவானது என்று கூறிவிட்டு, தற்போது அதற்கு முரணாக நடப்பது ஏற்புடையதல்ல.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்குச் சபாநாயகர் இடமளிக்க மறுத்தால், அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நிலையியல் கட்டளைகள் தொடர்பான பாரிய பிரச்சினையாகும்.

எதிர்க்கட்சியில் இருக்கும் போது நீங்கள் இவ்வாறான உரிமை விடயங்கள் தொடர்பில் கதைத்தவர்கள். உங்களால் சபாநாயகர் ஆசனத்தில் அமர்த்தப்பட்ட ஜகத் விக்கிரமரத்ன இப்போது சர்வாதிகாரி போன்று நடக்கின்றார். எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறு சர்வாதிகாரி போன்று நடந்துகொண்டதில்லை.

இதற்கு முன்னர் இந்தச் சபாநாயகர் ஆசனத்தில் இருந்தவரைச் சான்றிதழ் இல்லை எனக் கூறி நீக்கியது அநியாயமானது என்றே இப்போது தோன்றுகின்றது.

சான்றிதழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அசோக ரன்வலையையே தொடர்ந்து அந்தப் பதவியில் வைத்திருந்திருக்கலாம். அல்லது, நடுநிலையாகவும் தகுதியுடனும் சபையைத் தற்போது நடத்திச் செல்லும் பிரதி சபாநாயகரைச் சபாநாயகராக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

98 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

145 0 0