உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மோகன்லாலின் ‘ஆபரேஷன் கங்கா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சினிமா 3 மாதங்கள் முன்
160 பார்வைகள்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஆபரேஷன் கங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மோகன்லாலும் விஷ்ணு மோகனும் முதன்முறையாக இணைந்துள்ளனர். விஷ்ணு மோகன், உன்னி முகுந்தன் நடிப்பில் தேசிய விருது பெற்ற ‘மெப்படியான்’ திரைப்படத்தை இயக்கியவர்.

மோகன்லால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். போஸ்டரில் நகரத்தின் மீது பிரம்மாண்டமான பெண் சிலை ஒன்று வாளும் கேடயமும் ஏந்தியபடி காட்சியளிக்கிறது. சிலையைச் சுற்றி அடர்த்தியான மேகங்கள் காணப்படுவதுடன், அருகில் போர் விமானம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மேலும், போஸ்டரில் ‘Operation Ganga’ என்ற படத்தின் தலைப்புடன் ‘A Nation’s Promise’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ், ஆதில் ஹுசைன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘துரந்தர்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஷஷ்வத் சச்தேவ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

‘ஆபரேஷன் கங்கா’ திரைப்படம் ரஷ்யா–உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் கங்கா’ வெளியேற்ற நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பமாகியுள்ளதுடன், போலந்து, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். பல்வேறு மொழி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால், ‘ஆபரேஷன் கங்கா’ மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0