கார்த்தியின் சர்தார் 2 சென்சார் அப்டேட்
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். இதில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இது அவரது 100-வது திரைப்படம் என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன