உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
28 பார்வைகள்

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் கலந்துகொண்ட சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய கலந்துரையாடலை அடுத்து, அரசு இந்த இரு தரப்பினரையும் கண்டி ‘சஹஸ் உயன’ பகுதிக்கு அழைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது. இருப்பினும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த அரசு தவறிவிட்டது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை ‘சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்’ எனப் பெயர் மாற்றுவதை மட்டுமே அரசு செய்துள்ளது. மார்ச் மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

தேர்தல் சமயங்களில் இவர்களை நெறிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சியும் இந்த இரு தரப்பினரையும் ஏமாற்றியுள்ளார்.

அரசு இவர்களை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே மறக்காது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

73 0 0