உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

“உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்” – சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

சினிமா 2 மணி நேரம் முன்
17 பார்வைகள்

‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள் உன்னிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் அருமையாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனப் பாராட்டியுள்ளார்.

மேலும், “ஒரு நாள் நாம் சந்திப்போம். சிறப்பாக செய்கிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” எனக் கூறி அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவா நிர்வாணா இயக்கியுள்ள ‘இருமுடி’ படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறித்த திரைப்படத்தின் வசூல் ரூ.80 கோடியை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

நன்கு ஈழத்தமிழ் பேசத் தெரியும் : ஜெசன் சஞ்சய் வெளிப்படை

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனக்குத் தெரிந்த மொழிகள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்றும், தமிழையும் பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

70 0 0
சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

97 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

111 0 0