உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி : ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
47 பார்வைகள்

அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதன்படி, கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடைசி நேரத்தில் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்ததாக பரஸ்பரம் குற்றம் சாட்டின.

எனினும், ட்ரம்ப்பின் இந்த புதிய வரி அச்சுறுத்தல் தனக்கு வியப்பளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கர்னி, கனடாவின் வாகன உற்பத்தியைக் அழிக்க ட்ரம்ப் நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா “சரியான அணுகுமுறையுடன்” வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கனடா தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த குறிப்பிட்ட திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50வீத வரி விதிக்கும் அமெரிக்காவின் கெடுவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கொங்கோவில் உயிர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் : பாப்பரசர் லியோ கோரிக்கை

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக உயர்ந்துள்ள உருத்தூக்கும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை…

38 0 0
உலக செய்திகள்

மருத்துவ பரிசோதனையின் பின் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் “மருத்துவ ரீதியாக நலமாக உள்ளார்”…

50 0 0
உலக செய்திகள்

தம்முடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு…

61 0 0
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி தீவிரம் : மக்களை தாயர்ப்படுத்தும் ஈரான்!!

ஈரானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் மக்களைத் தயார்படுத்தி வருகிறது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள துறைமுகக் முற்றுகை…

76 0 0