உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு; இருவர் தப்பியோட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
61 பார்வைகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலான் வலைகளை கந்தளாய் பொலிஸார் நேற்று மாலை (20) மீட்டுள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு (Vice Branch) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பிக்கூடுகள் 22, நைலான் வலைகள் 160 மீற்றர் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

பொலிஸாரின் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பின் போது, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சான்றுகளை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அன்னாசிப் பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஆயத்தம்

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…

47 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

56 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில்…

64 0 0