உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கோர விபத்து; தாய், மகள் உட்பட மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
70 பார்வைகள்

கம்பஹா மாவட்டம், மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று முன்தினம் முச்சக்கர வண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி, அவரது தாய் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புதிய கண்டி வீதியில் பியகமையிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி வலது புறமாகத் திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த காருடன் மோதி இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் முச்சக்கர வண்டியின் சாரதி, 7 வயது சிறுமி மற்றும் அந்தச் சிறுமியின் தாயார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த முச்சக்கர வண்டியின் சாரதி 69 வயதுடைய தெல்கொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், உயிரிழந்த 39 வயது பெண் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகியோர் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0