உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
178 பார்வைகள்

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா செடிகளை பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380), இஸ்மத் (88503) ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4 ஆம் மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.

கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக இலங்கை நாட்டு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான லக்ஸ்மன் (24380), சமீர (61949), ஆரிப்தீன் (64940), மனோஜ் (87274), ராஜபக்ஸ(87987) ,பொலிஸ் உத்தியோகத்தர்களான வாசுல (35808), விஜிதரன் (90954) மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க (10560) அடங்கிய பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேர்தலை முடக்கி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதா?

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், கொழும்பு…

106 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

102 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

112 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உ**யிரிழந்த சம்பவம்; அமைச்சர் சந்திரசேகர் உடனடி தலையீடு.!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக…

115 0 0