உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
98 பார்வைகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை நாடாமன்றத்தில் பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான அரசியல் மற்றும் சமூகத் தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். உதுமாலெப்பை, ரவூப் ஹக்கீம், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0