உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

AI தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட ஆபாச புகைப்படம் : சுருதி ஹாசன் வழக்குத் தாக்கல்!

சினிமா 2 மாதங்கள் முன்
116 பார்வைகள்

நடிகர் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தனது நிழற்படம், குரல் மற்றும் அடையாளம் போன்றவை செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மாற்றியமைத்து, ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று தன்னை ஆபாசமாகச் சித்தரிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்கி பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள அவ்வாறான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனது அனுமதியின்றி தனது பெயர், நிழற்படம் மற்றும் குரல் ஆகியவை வணிகப் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது அடையாளம் மற்றும் ஆளுமை உரிமைகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஸ்ருதி ஹாசன், இதற்குக் காரணமானவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

54 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0