உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 5,000 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றம்

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
95 பார்வைகள்

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் குறித்த காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 5,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தன.

இதன்படி, கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 947.2 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டிற்குப் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய வளர்ச்சியைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் நாட்டிற்குப் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

இதற்கமைய, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 80.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வளர்ச்சியைக் காட்டி, ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் பதிவாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

48 0 0