உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மீனவர்களே எச்சரிக்கை! : கடலுக்குச் செல்ல வேண்டாம்!!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
107 பார்வைகள்

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மறுஅறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

43 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0