உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தரத் தீர்வு- ஜெகதீஸ்வரன் எம்பி தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
134 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக குறித்த மின்தடை ஏற்பட்டு வருகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில்,அப்பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஆட்சிக் காலங்களில் அதிகாரங்களில் காணப்பட்ட குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மின் தடை பிரச்சினைக்கு ஏன் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மன்னாரில் சனிக்கிழமை (8) நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் குறித்த மின்தடை பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பப்பட்ட போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வருவது குறித்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் பலர் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்கிறோம்.

அந்த வகையில், இது இந்த விடயம்   கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறுவதாக மக்கள் கூறுகிறார்கள்.

ஆனாலும், நான் இது கேள்விப்பட்ட உடனேயே அரசாங்க அதிபரோடு தொலைபேசி தொடர்பு கொண்டு, அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட மின்சார சபையினுடைய நிறைவேற்று பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடைய மன்னார் மாவட்ட பொறியியலாளர், அதேபோல் இது தொடர்பான அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக இது தொடர்பாக நான் வினவி இருந்தேன்.

தற்பொழுது மின்சார சபையினுடைய நிறைவேற்று பொறியியலாளர் கூறியிருந்தார்  இந்த மின்சார இணைப்பு  உயிலங்குளத்தில் இருந்து மன்னார் தீவு பகுதிக்கு வருகின்ற மின்சார இணைப்பில் உடைய  கம்பிகளில், இரவு நேரங்களில் இந்த காற்று கூடுதலாக இருக்கின்ற காலப்பகுதியில் அந்த மணல் அல்லது துகள்கள் ஈரத்துடன் அந்த மின் கம்பிகளில், மின்சாரம் வழங்குகின்ற விநியோக கம்பிகளில் படி வதால் அடிக்கடி மின்சாரம் தடை படுவதாக காரணம் கூறியிருந்தார்.

நான் கூறியிருந்தேன், தொடர்ச்சியாக இவ்வாறு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஒரு நிரந்தரமான தீர்வு நிச்சயமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

காரணம் என்னவென்றால், க.பொ.த உயர்தர பரீட்சை மட்டுமல்ல, ஏனைய பரீட்சைகள், ஏனைய சாதாரண மக்களுக்கும் இது ஒரு அசௌகரியமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.

அதேபோல் இலத்திரனியல் சாதனங்கள் கூடுதலாக பழுதடைவதாக மக்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். எனவே, விரைவாக இதற்கு நிரந்தர தீர்வொன்றை எட்ட வேண்டும் என்ற வகையில் கூறியிருந்தேன்.

அதற்கு உடனடியாக   உயிலங்குளத்தில் இருந்து  வருகின்ற அந்த பிரதான இணைப்பை மன்னார்-வவுனியா பாதை ஊடாக அதாவது RDA-விற்கு சொந்தமான அந்த வீதி அருகே உள்ள பாதை ஊடாக இந்த மின்சார இணைப்பை மன்னார் தீவு பகுதிக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே முழு அனுமதியும் பெற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அதை நிவர்த்தி செய்து தருவதாக மின்சார சபையினர் கூறியிருக்கின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையிலே, மக்களுடைய பிரச்சனைகளை அவ்வப்போது இனங்கண்டு, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் தீர்த்து வைப்பதில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்போதும் பின்னிற்க போவதில்லை.

இதேவேளை, பாராளுமன்றத்திலே ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த மின்சார விநியோக தடை சம்பந்தமாக. இவர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இவர்கள் தான் ஏற்கனவே இந்த 15 வருடமாக இங்கே மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களாகவும், அதேபோல் மன்னார் மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஏன் இவர்களால் அப்பொழுது இதற்கு நிரந்தரமான தீர்வு காண முடியவில்லை?

இப்பொழுது ஒரு சந்தர்ப்பவாதம் போல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு இடம் பெறுகிறது என்று ஏதோ இன்று நேற்று இடம்பெற்றது போல அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே, எங்களுடைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலே மக்களுக்கான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்ற வகையில், நாங்கள் அதற்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம். என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0