உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
89 பார்வைகள்

இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம் கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகனும் உடனிருந்தார்.

இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு மரணமும் சம்பவித்தது. அங்கே தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். அதேபோல வெலிக்கடை சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த சிறைச்சாலைகளில் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகத்தான் உள்ளது. கடந்த காலங்களில் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் இடம்பெற்ற சம்பவங்களை நினைக்கும்போது அச்சம் கொள்ள தோன்றுகிறது. பெற்றோரும் அங்கு உள்ள கைதிகளும் அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.

இந்த நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதிகள் வழங்தப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

இந்த விடயத்தை எம்மிடம் நினைவுபடுத்திய அரசியல் கைதிகள், இது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், தமது விடுதலையை உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.

எனவே, இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளை தமிழ் மக்களது வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்காமல் அவர்களது விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தை கையாள்வதற்காக ஒரு குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கைகள் ஏற்கனவே நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்குரிய நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.

அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவதற்கு, அந்த குழு முன்வைத்த விடயங்களை விரைந்து நடைமுறைப்படுத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த குழுவின் அறிக்கைக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேவேளை ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை சிறைச்சாலை கட்டளை சட்டத்தின் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தியோ, அவர்களது நன்னடத்தை அடிப்படையிலேயோ விடுதலை செய்து, அவர்களும் அவர்களது உறவுகளுடன் சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்.

அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றார்கள். நாங்களும் சிறையில் வாடியவர்கள் என்ற ரீதியில் எமக்கு அதன் வேதனை தெரியும். எனவே அரசாங்கம் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிங்கராஜ வனப்பகுதியில் உயிரியல் வளக் கொள்ளை – 4 சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபாய் அபராதம்!

சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்தில் உயிரியல் வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு மொத்தம் 7 கோடியே 64 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

102 0 0
இலங்கை செய்திகள்

தாய்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவிற்கு அழைப்பு

எதிர்வரும் காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் ஃபுவாங்கேட்கியோ (Sihasak Phuangketkeow), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு…

108 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி இன்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர்…

114 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற…

109 0 0