உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நுவரெலியா மாவட்டத்தில் கனமழை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
104 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இன்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.

நீரேந்து பகுதிகளான மவுசாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது. அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக மகாவலி கங்கை, களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் தாழ் நில பகுதியில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

மேலும், பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் சிவனடிபாத மலை பகுதியில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மலைக்கு செல்ல வேண்டாம் என ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாமிமலை ஓயா, மரே ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகள், ஏனைய ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

56 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0