உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிட அனுமதி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
70 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (07) நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே பெயரிடப்பட்ட 38 சந்தேகநபர்களுடன் இன்று பெயரிடப்பட்ட 24 பேரையும் சேர்த்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் திறந்த நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அது தொடர்பான பெயர் பட்டியலையும் ‘பி’ அறிக்கையையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேரடியாக நீதவானிடம் ஒப்படைத்தது.

அத்துடன், சந்தேகநபர்களான 38 பேரை இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சம்பவத்தில் காயமடைந்த சாட்சியாளர்களான சிறைச்சாலை அதிகாரிகள் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அந்த அடையாள அணிவகுப்பை எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களையும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் 62 சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றம், நெரிப்படைச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

50 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

51 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

59 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

56 0 0