உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத தகுதியான மக்களுக்குரிய நிதியை உடனடியாக வழங்குக.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
126 பார்வைகள்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான A.J. மெல்கம் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அல்லது திட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் தொடர்பில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட நடவடிக்கைகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படக்கூடும் என்பதால், இதுவரை அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத தகுதியான மக்களுக்கு உரிய நிதியை உடனடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் A.J. மெல்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் சிவில் அமைப்புகளும், கற்றறிந்த இளைஞர் சமூகமும் முன்வந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

50 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

51 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

59 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

56 0 0