உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் கழிவுகள்; பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
68 பார்வைகள்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து, பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி நிற்பதால், கொசுப் பெருக்கம் அதிகரித்துத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், பாதையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன.

இந்நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபையோ அல்லது சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களோ (PHI) இதுவரை எவ்வித உரிய கவனமும் செலுத்தவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் குவிந்துள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும், சீரான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

47 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0