உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க தேசிய திட்டம் அவசியம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
225 பார்வைகள்

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதிக அவதானம் மிக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போதைய டெங்கு நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், நுளம்பு கட்டுப்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முந்தைய டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம் காணுதல், அதிக அவதானம் மிக்க பகுதிகளைக் கண்டறிதல், கூட்டு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்துதல், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு தொடர்பான மரணங்களைக் குறைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

அண்மை காலமாக டெங்கு மரணங்கள் குறைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனக் குறிப்பிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் காலங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம் வரை கட்டமைக்கப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, டெங்கு அபாயம் தொடர்ந்தபோதிலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 இலிருந்து 350 முதல் 400 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிங்கராஜ வனப்பகுதியில் உயிரியல் வளக் கொள்ளை – 4 சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபாய் அபராதம்!

சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்தில் உயிரியல் வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு மொத்தம் 7 கோடியே 64 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

108 0 0
இலங்கை செய்திகள்

தாய்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவிற்கு அழைப்பு

எதிர்வரும் காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் ஃபுவாங்கேட்கியோ (Sihasak Phuangketkeow), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு…

109 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி இன்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர்…

114 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற…

110 0 0