உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால் ஈரானும் தாக்குதல்களை நிறுத்தும்!

உலக செய்திகள் 16 மணி நேரம் முன்
67 பார்வைகள்

அமெரிக்கா தாக்குதல்களை நடத்தாமல் இருக்கும் வரை ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் தங்களின் தாக்குதல் இலக்குகள் குறைந்து வருவதாகவும், அமெரிக்க ஆயுதக் களஞ்சியம் காலியாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்ததை அடுத்து, அமெரிக்கா தமது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் மீது 13 இரவுகள் தீவிரமாக அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் எவ்வித தாக்குதல்களும் பதிவாகவில்லை.

அத்துடன் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகள் மீதும் ஈரானும், கடந்த இரண்டு நாட்களாகத் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.

தெஹ்ரானின் நிலைப்பாடு தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதாகவே தொடர்வதாகவும், தாக்குதல்கள் நின்றால், ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

2036-க்குள் பணத்தின் தேவை குறையும்?

2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தின் தேவையே பெருமளவில் குறைந்துவிடும் என தொழில்நுட்பத் தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித வடிவ…

73 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் ஒன்று வெடித்துச் சிதறியதாகத் தகவல்!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கன்னிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அங்கீகரித்த நீர்வழிப்பாதையை பின்பற்றாமையே…

48 0 0
உலக செய்திகள்

கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்!

கெமரூன் நாட்டின் டூவாலா நகரில் அமைந்துள்ள நியூ பெல் சிறைச்சாலை, ஒரு தனி நகரைப் போலச் செயல்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த…

89 1 0
உலக செய்திகள்

பிரான்சில் கட்டுக்கடங்காது பரவும் காட்டுத்தீ!!

பிரான்சின் தென்மேற்கு நகரமான போர்டோவை (Bordeaux) நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதால், பிரான் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் திங்கள்கிழமை (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். போர்டோ…

48 0 0