உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ; மக்கள் வெளியேற்றம்.!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ மிகக் கொடூரமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த காட்டு தீ காரணமாக, இதுவரை இரண்டு நாடுகளிலும் சேர்த்து 2,20,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் தலைநகர் மத்ரித்துக்கு மேற்கே மூன்று இடங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீ, ஒன்றாக இணைந்து பெரும் தீப்பிழம்பாக மாறியுள்ளது. இதனால் அங்கு நிலைமை மிக மோசமடைந்துள்ளது.

இதனால் ஸ்பெயின் அரசு தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

மத்ரித் பகுதியில் சுமார் 25,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் 40,000 பேர் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ வரலாற்று சிறப்புமிக்க ‘எல் எஸ்கோரியல்’ நகரை நெருங்குவதைத் தடுக்க, ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0