மெளனப் போராட்டத்தில் குதித்தார் அண்ணா ஹசாரே!
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகில்யா நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக நேற்று மௌனப் போராட்டம் நடத்தியுள்ளார்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, அதாவது 2 மணி நேரம் அவர் மௌனப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
போராட்டத்துக்கு பிறகு அவர் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்திக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்று எழுதினார்.
அதில், “மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
மாணவர்களின் கருத்துகளை அரசு பொறுமையுடன் கேட்கவேண்டும்.
அவர்களுடன் நேர்மறையான பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு நல்ல தீர்வை காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.