உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெல்லி போராட்டத்துக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆலியா பட் ஆதரவு!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
127 பார்வைகள்

இந்தியாவின், டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய நடிகை ஆலியா பட் ஆகியோர் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மாணவர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது அவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே. இத்தகைய நிலை மீண்டும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தந்தை ஒரு பேராசிரியர் எனக் குறிப்பிட்ட அவர்,

“தோல்வி அடைவது தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. குறுக்கு வழிகளை எப்போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை தனது சிறு வயதிலேயே தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார்” என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.

இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஆலியா பட் ,

“தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் மிகப்பெரிய தியாகத்தின் பயணம் உள்ளது.

அவர்கள் தங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அவர்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரையும், அடுத்த தலைமுறைக்கு சிறந்த பாதையை அமைத்துக் கொடுப்பவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0