உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
125 பார்வைகள்

இந்தியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தார்.

இந்தியாவில் பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்திய பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று கோரி 26 நாட்களாக அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் விரைவில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் மற்றும் லடாக் அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் முன்னிலையில் சோனம் வாங்சுக் பழச்சாறு அருந்தி உணவுத் தவிர்ப்பை முடித்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ போராட்டத்தைக் கைவிடுமாறு சோனம் வாங்சுக்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0