உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!

27 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை(22) மாலை கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை மீன்பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் நேற்று புதன்கிழமை (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை விசாரணைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை(23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மெளனப் போராட்டத்தில் குதித்தார் அண்ணா ஹசாரே!

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த…

61 0 0
இந்திய செய்திகள்

புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அண்ணாமலை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்

புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை…

79 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்துக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆலியா பட் ஆதரவு!

இந்தியாவின், டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…

71 0 0
இந்திய செய்திகள்

உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்

இந்தியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தார். இந்தியாவில் பரவலாக…

70 0 0