உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
52 பார்வைகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது.

வடபகுதி மக்களின் அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது.

இருப்பினும், இடவசதி இன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்கள் நீடிக்கின்றன.

இந்தத் அஞ்சல் நிலையத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 1 றூட் 24.5 பேர்ச் காணியும் கட்டடமும் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தன.

பின்னர், 2012 ஆம் ஆண்டளவில் அதன் ஒரு பகுதி (8,695 சதுர அடி) அஞ்சல் திணைக்களத்திற்கு விடுவிக்கப்பட்ட போதிலும், மீதமுள்ள பகுதி இன்னும் படையினர் வசமே உள்ளது.

விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக, வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

வடபிராந்திய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் இந்தத் தபால் நிலையத்தின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை விரைவாக நிர்மாணிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

43 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

44 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

75 0 0
இலங்கை செய்திகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார் சுமந்திரன்

தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.…

17 0 0