உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் கனடாவில் இலங்கை வைத்தியர் கைது!

உலக செய்திகள் 11 மணி நேரம் முன்
43 பார்வைகள்

டொராண்டோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனையான Hospital for Sick Children (SickKids)-இல் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான இணையவழி விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

டொராண்டோ பொலிஸாரின் Internet Child Exploitation (ICE) பிரிவு, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் ஒரு மின்னணு சாதனம் மூலம் அணுகப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவலைத் தொடர்ந்து, 2026 ஜனவரி மாதத்தில் விசாரணையை ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து, 2026 பெப்ரவரி மாதத்தில் Hospital for Sick Children மற்றும் தனியார் வீடொன்றில் தேடுதல் உத்தரவுகள் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது, பணியிடக் கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் டிலன் திசாநாயக்க (Dilan Dissanayake) என்பவர் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் Hospital for Sick Children வைத்திசாலையின் வைத்தியராக பணியாற்றுவதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் அவரது மருத்துவப் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

அவர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களை வைத்திருந்தமை மற்றும் அவற்றை அணுகியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானில் அமெரிக்கா நடத்திவரும் போருக்கான செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு!

ஈரானில் அமெரிக்கா நடத்திவரும் போருக்கான செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth ) செவ்வாய்க்கிழமை…

25 0 0
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கன மழை – 20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நுரிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

34 0 0
உலக செய்திகள்

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை பிரான்ஸ் தடை செய்துள்ளது!

2027 ஜனவரி முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், இளைஞர்கள் இத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்…

19 0 0
உலக செய்திகள்

AI மூலம் முதலாம் உலகப் போர்க் கதைகளுக்கு உயிரூட்டும் பாடசாலை மாணவர்கள்!

இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலையைச் சேர்ந்த வரலாற்று மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாம் உலகப் போர் வீரர்களின் நாட்குறிப்புகளைத் குறும்படங்களாக உருவாக்கியுள்ளனர்.…

17 0 0