உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்குச் செல்வோருக்கு விசேட அறிவுறுத்தல்!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
81 பார்வைகள்

தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இந்தக் கடுமையான நெரிசலுக்கு மத்தியிலும் சிறுவர்களுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துவதற்குப் பெற்றோர்களினதும் பாதுகாவலர்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளதாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சிகிச்சைகள் அல்லது கிளினிக் விஜயங்களுக்காக (Clinic Visits) சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் 5 ஆவணங்களையும் கட்டாயமாக எடுத்து வருமாறு பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

1.தனிப்பட்ட சுகாதார இலக்கம் அல்லது பார்ஃகோட் அட்டை (Personal Health Number (PHN) / Barcode Card)

2.சிறுவர் சுகாதார வளர்ச்சிப் பதிவுப் புத்தகம் / நிறை பதிவுப் புத்தகம் (Child Health Development Record (CHDR) / Weight Record Book)

3.மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பற்றிய விபரங்கள் (Allergy Records – Drug / Food)

4.கிளினிக் புத்தகங்கள் (Clinic Books)

5.வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அட்டைகள் அல்லது நோயறிதல் அட்டைகள் (Discharge Cards / Diagnosis Cards)

பொதுமக்கள் இது தொடர்பில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, மேலதிக விபரங்கள் ஏதேனும் தேவைப்படின் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் அலுவலகத்தின் 011 2693711 ( நீடிப்பு 307) என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

53 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

52 0 0