உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
59 பார்வைகள்



“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் ஆராய்ந்து அறிந்துகொள்வதே தமது இந்தப் பயணத்தின் பிரதான நோக்கம் எனத் தூதுக்குழுவினர் இதன்போது குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியதுடன், அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார்.

குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் கடந்த காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்டக் குழுக்களில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆளுநரால் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்த விடயங்களை அரசு மிகவும் நேரிய சிந்தனையுடனேயே அணுகி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவது தொடர்பிலும், செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடனான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, துறைமுகம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, அதன் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம், விமான சேவைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுக்குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்தனர். வடக்கு மாகாணமானது விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் அதியுயர் வளங்களைக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அத்துறைகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகள் தற்போதும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இம்முக்கிய கலந்துரையாடலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் திருமதி கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ், தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

52 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

73 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

51 0 0