உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

பசிலுக்கு மீண்டும் பிடியாணை.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
51 பார்வைகள்

மாத்தறை காணி கொள்வனவு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மாத்தறை தலைமை நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

மாத்தறை, எலியகந்த வீதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கிலேயே, அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமையினாலேயே, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் நடவடிக்கையை நீதிவான் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்த தலைமை நீதிவான், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மேற்படி பிணையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

51 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

50 0 0