உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

தமிழக மீனவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
39 பார்வைகள்

தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் வரும் தமிழக மீன்பிடியாளர்களின் அத்துமீறல்களை, புதிதாக தமிழகத்தை பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (21) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அந்த அமைப்பின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா மேலும் கூறுகையில்,

சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் குறிப்பாக புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய மீன்பிடியாளர்கள் எமது தொழிலாளர்களின் கோடிக்கணக்கான செத்துக்களை சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

குறிப்பாக புங்குடுதீவின் கரை வரை வந்து அந்த வெறியாட்டத்தை தாமாக மீனவர்கள் அரங்கேற்றிச் சென்றுள்ளனர். இதை இலங்கையின் கடற்படையினரும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதைவிட கடற்றொழில் அமைச்சரும் மீனவர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடன் செயற்படுகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.

இலங்கை கடற்படையைக் கொண்டு இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றே நாம் அநுர அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

ஆனால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் இங்கொன்றும் அங்கொன்றும் பேசித்திரிகின்றாரே தவிர உருப்படியான எதையும் இதுவரை செய்யவில்லை.

தேர்தல் காலத்தில் கடற்தொழிலாளர்களிடம் வாக்குக் கொடுத்ததை இந்த சந்திரசேகரன் அமைச்சரும் அவர்சார் தரப்பினரும் மறந்துவிட்டனரென்றே தோன்றுகின்றது.

அப்பாவி கடற்றொழிலாளர்களாகிய நாம் ஏமாற்றத்துடன் எமது இருப்பையும் இழந்து வருகின்றோம்.

இனிவரும் நாட்களில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

எனவே அவ்வாறானதொரு நிலை வரும் முன்னர் எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

51 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

50 0 0